புதுக்கடை நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்சீவவை சுட்ட சந்தேகநபர், புத்தளம் -பாலாவி பகுதியில் வைத்து கைது
5 months ago






புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவவை சுட்டு படுகொலை செய்த பிரதான சந்தேகநபர், புத்தளம் -பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்றில் தப்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், இராணுவ கமாண்டோ படையணியின் முன்னாள் சிப்பாய் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
