இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 16 அடி உயரம் கொண்ட பிள்ளையார் சிலை புஸ்ஸல்லாவயில்.

1 year ago


இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 16 அடி உயரம் கொண்ட இந்தியா தமிழ்நாடு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிலையை ஒத்த சிலை புஸ்ஸல்லாவயில் பிரதிஷ்டை செய்வதற்கான பூமி பூஜை எதிர்வரும் 08 ஆம் திகதி இடம் பெறவுள்ளது.

முதல் கட்டமாக அன்றைய தினம் புதிதாக அமைக்கப்பட்ட வழி பிள்ளையருக்கான கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. 06 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு பூசைகளும் விநாயகர் பிரதிஷ்டையும் நடைபெறும்.

07 ஆம் திகதி பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று எண்ணெய் காப்பும் இடம்பெறவுள்ளது. பதினாறு அடி கொண்ட கற்பக விநாயகர் சிலை இந்தியா தமிழ்நாடு பிள்ளையார்பட்டி ஆலய வளாகத்தில் செதுக்கப்பட்டு வருகின்றது

கண்டி நுவரெலியா பிரதான பாதையில் புஸ்ஸல்லாவ நகரத்தை குறிக்கும் ஆரம்பப் பகுதியிலேயே இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.



அண்மைய பதிவுகள்