கொழும்பு கோட்டையில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகின்றன ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள்.
9 months ago


மக்கள் பயன்பாட்டுத் திறக்கப்படுகின்றன ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள்
கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் இதுவரை வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் இதுவரை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன.
ஆனால், அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அந்த அனைத்து வீதித் தடைகளும் அகற்றப்பட்டு பல வருடங்களின் பின்னர் அப்பகுதியிலுள்ள வீதிகள் மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன.
அதன்படி, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக உள்ள சேர் பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை என்பன பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படுகின்றன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
