முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட 11 பேரிடம் 30 கோடி ரூபாய் நட்டஈடு கோரி மூவர் வழக்கு தொடுத்துள்ளனர்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட 11 பேரிடம் 30 கோடி ரூபாய் நட்டஈடு கோரி மூவர் வழக்கு தொடுத்துள்ளனர்.
கெஹலிய ரம்புக்வெல சுகாதார அமைச்சராக இருந்தபோது அவரின் பணிப்பின்பேரில் இறக்குமதி செய்யப்பட்ட பிரெட்னிசோலோன் மருந்தால் கண்பார்வையை இழந்த மூவரே இந்த வழக்கை தாக்கல் செய்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், கெஹலிய ரம்புக் வெல, ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், பேராசிரியர். எஸ்.டி. ஜெயரத்ன, மருத்துவர் விஜித் குணசேகர, மருத்துவர் அசேல குணவர்த்தன, மருத்துவர் ரொஹான் எதிரிசிங்க, மருத்துவர் மகேந்திர சென விரத்ன, யக்கலையை சேர்ந்த சமீ கெமிஸ்ற் லிமிற்றட், இன்டியானா
ஒப்தல்மிக்ஸ் எல். எல். எபி. மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த வழக்குகளின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த 2023 ஏப்ரல் 5ஆம் திகதி நுவரெலியா பொது மருத்துவமனையில் கண்புரை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேர் பார்வை இழந்தனர். தரமற்ற பிரெட்னிசோலோன் மருந்தை இவர்களுக்கு பயன்படுத்த சிபாரிசு வழங்கப்பட்டது. தரமற்ற இந்த மருந்து மூலமாகவே அவர்கள் பார்வையை இழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக் கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
