யாழ்.வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் சந்தேகத்துக்கு இடமான மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டமையால் இறப்புச் சம்பவித்திருக்கலாம் என்று உடற்கூற்றுப் பரிசோதனைகளின் அடிப்படையில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சந்திரபாலன் (வயது-45) என்பவர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் திடீர் சுகவீனமுற்றதைத் தொடர்ந்து ஊறணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சடலம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு சென்ற பருத்தித்துறை பதில் நீதவான் திருமதி விஜயராணி உருத்திரேஸ்வரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைத்து, உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
சடலத்தின் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைகள் நேற்று இடம்பெற்ற நிலையிலேயே, ஒருவகை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டமையால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிகப் பகுப்பாய்வு நட வடிக்கைக்காக மாதிரிகள் பெறப்பட்டு அவை கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
