
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை மாங்குளம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு விசாரணைக்கு வருமாறு மாங்குளம் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் வீட்டிற்கு நேற்று முன் தினம் (07.08.2024) இரவு சென்ற பொலிஸார், ஊடகவியலாளர் வீட்டில் இல்லாத நிலையில் அவருக்கான அழைப்பு கடிதத்தினை குடும்பத்தாரிடம் வழங்கி சென்றுள்ளனர்.
குறித்த கடிதத்தில், “உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் விசாரணைக்காக வாக்குமூலம் பதிவுசெய்ய இருப்பதனால் 2024.08.09 ஆம் திகதி காலை 9 மணிக்கு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
