தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா 1,700 ஊதியம் வழங்கும் வர்த்தமானி இடைநிறுத்தம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக அக்கரபத்தனை பெருந்தோட்டக் கம்பனி உட்பட 21 பெருந்தோட்டக் கம்பனிகள் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கிய நிலை யிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தொழிலாளர் ஆணையாளர் உள்ளிட்ட 52 பேரை வழக்கின் பிரதிவாதிகளாக கம்பனிகள் குறிப்பிட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
