கடன் மறுசீரமைப்பு செயல்பாடுகளுடன் இணைந்ததாக இரு தரப்புக் கடன் வழங்குநர்களி டமிருந்து 500 கோடி டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்கவுள்ளது. அத்துடன், வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம், 300 கோடி டொலர் கடன் இரத்து செய்யப்படும். இதன் மூலம், நாட்டுக்கு 800 கோடி டொலர் நிவார ணமாகக் கிடைக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் உறுமய திட்டத்தின் கீழ் காணி உறுதி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில்,
மிகவும் கடினமான காலகட்டத்தி லேயே என்னால் ஆட்சியமைக்க நேரிட்டது. ஆட்சியைப் பொறுப்பேற்க தலைவர்கள் எவரும் அப்போது முன்வரவில்லை. ஆனாலும் நான் ஏற்றுக் கொண்டேன். பல கட்சிகளை ஒன்றி ணைத்து ஆட்சியமைத்தேன். தற்போது மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்க ஆரம்பித்திருக்கிறோம்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிய டைந்த போது மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். இன்று இந்தப் பகுதி எம். பிக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தமது வீடுகள் தீயிடப்பட்டதை மறந்துவிட்டு மக்களுக்கு நன்மை செய்ய முன்வந்திருக்கிறார்கள்.
இன்று நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்த எமக்கு 4 வருட கால அவகாசம் உள்ளது. மேலும், சுமார் 6 வருடங்கள் மிதமான சுமையுடன் கடனை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். செலுத்தவேண்டிய வட்டியில் ஒரு தொகை வெட்டிவிடப்பட்டுள்ளது. அதனால் 500 கோடி டொலர்கள் நாட் டுக்கு எஞ்சும்.
தற்போது தனியார் ஒப்பந்ததாரர்க ளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். அதன்படி, சுமார் 300 கோடி டொலர் கள் குறைவடையும். எனவே நாம் செலுத்தவேண்டிய பணத்தில் இருந்து மொத்தம் 800 கோடி டொலர்கள் வெட்டிவிடப்படும்.
மேலும், தளர்வான நிபந்தனைகளின் கீழ் 200 கோடி டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சீனா, இந்தியாவின் உதவித் தொகைகள் அதற்குள் உள்ளடங்காது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் 800 கோடி டொலர்களை சேமித்துள்ளோம் - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
