ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசு இந்திய அரசுடன் இணைந்து செயற்பட தயார்.-- அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
8 months ago

ஜனாதிபதி அனுகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் வாழ்த்துச் செய்திக்கு பதிலளித்து, சமூக ஊடகத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
எங்கள் கலாசார உறவுகளையும் மற்றும் சிறந்த இரு தரப்பு உறவுகளையும், எங்கள் மக்களின் பரஸ்பர நன்மைகளை வலுப்படுத்துவதற்காகவும், இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கான உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துகின்றேன் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
