வடக்கு கடற்படையினர் எதிர்வரும் இரு தினங்கள் பருத்தித்துறை கடலில் சூட்டுப் பயிற்சி, மீனவர்கள் பிரவேசிக்க வேண்டாம் என அறிவிப்பு

1 year ago



வடக்கு பிராந்திய இலங்கை கடற்படையினர் எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படை கலங்களான P475, P481 ஆகிய கலங்களில் இருந்து சூட்டுப் பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.