நீர்கொழும்பு வர்த்தகர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல்லை கண்டுபிடித்தார்.
7 months ago

நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
எனினும் இதன் பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
17.42 கெரட் நிறை கொண்ட குறித்த மாணிக்கக்கல் பதுளை, பசறை பகுதியில் உள்ள சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாணிக்கக்கல் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழைக் கொண்டுள்ளது.
உலகச் சந்தையுடன் இணைவதற்கும் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கும் இலங்கைக்கு இந்த மாணிக்கக்கல் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
இதன் உரிமையாளர் சுமார் 20 வருடங்களாக மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
