புகலிடக் கோரிக்கையாளர்கள் அபாயம் உள்ள நாட்டுக்கு திருப்பி அனுப்பக்கூடாது, சர்வதேச சட்டத்துக்கு இலங்கை அரசு கட்டுப்பட வேண்டும் சட்டத்தரணி ச.அம்பிகா வலியுறுத்து

அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய அபாயம் அகதி உள்ள நாட்டுக்கே வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பக்கூடாது எனும் சர்வதேச அடிப்படைச் சட்டத்துக்கு இலங்கை அரசு கட்டுப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் மியான்மரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
நாட்டை வந்தடைந்த குறித்த மியான்மர் அகதிகளின் பெயர் விவரங்கள் அடங்கிய பட்டியல் அந்நாட்டு அரசாங்கத்திடம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை மீண்டும் நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டை வந்தடைந்த அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் அவர்களது சொந்த நாட்டில் முகங் கொடுக்கக் கூடிய அச்சுறுத்தல், உயிராபத்து என்பன தொடர்பில் முறையாக மதிப்பீடு செய்யாமல், அவர்களை அந்நாட்டுக்குத் திருப்பியனுப்பக் கூடாது.
அவ்வாறு திருப்பியனுப்புவது அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே அமையும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
