ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் தமிழ்மக்களின் குரல்வளைகளைக் கடந்த காலங்களில் நசுக்கியவர்களே- யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா.இளம்பிறையன் காட்டமாகத் தெரிவித்தார்.

தற்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான அனைவரும் தமிழ்மக்களின் குரல்வளைகளைக் கடந்த காலங்களில் நசுக் கியவர்களே. தமிழ் இளைஞர்கள், யுவதிகள் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட போது இவர்களும், இவர்களின் சந்ததிகளுமே ஆட்சியிலிருந்தனர்.-இவ்வாறு யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா.இளம்பிறை யன் காட்டமாகத் தெரிவித்தார்.
காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்க லைக்கழக மாணவர் ஒன்றியத்தி னரின் ஏற்பாட்டில் கடந்த வெள் ளிக்கிழமை இடம்பெற்ற கவன யீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் தமிழர் பிரதேசங்க ளுக்கு வருகை தந்து பொய் வாக்குறுதிகள் அளிப்பதும், காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான விசாரணையை நடத்துவோம் என்று சொல்வதும், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக் கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வோம் என்று கூறுவதும் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாடாகவே உள்ளது. போரின்போது காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் குறித்த உண்மையை அரசாங்கம் இன்றுவரை கூறவில்லை.
வழக்குத் தாக்கல், புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்தல் எதுவுமின்றி காலத்தை இழுத்த டிப்புச் செய்து வருகிறது. வடக்கு - கிழக்கில் தமிழ் நீதிவான்கள் தங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி விடுவார்கள் என்பதற்காக சகல வழக்குகளும் அநுராதபுரம் நீதிமன் றத்துக்கு மாற்றப்பட்டு தோல்வியடையச் செய் யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
