இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான விருது விழாவான “குவியம் விருதுகள் 2024” நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.









இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான விருது விழாவான “குவியம் விருதுகள் 2024” நிகழ்வு கடந்த சனிக்கிழமை(28) யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த விழாவில் கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகி, பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
விருது விழாவில் , முழு நீள திரைப்படங்கள் , ஆவணப்படங்கள் , குறும்படங்கள் மற்றும் காணொளிப் பாடல்களுக்காக விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதற்கமைய கிடைக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான படைப்புக்களில் இருந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அதேவேளை ஈழத்து முதுபெரும் இசை கலைஞர் கலைவாணர் கண்ணன் மாஸ்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் ஈழ தமிழர்களுக்கு உலகெங்கும் பெருமை தேடித்தந்த ஈழத்துக் குயில் என அழைக்கப்படும் பிரபல பாடகி கில்மிஷாவிற்கும் கௌரவிப்பும் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.
மூன்றாவது தடவையாக இடம்பெறவுள்ள குவியம் விருதுகள் நிகழ்வில் மேலும் பல சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
