

வடக்கு மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வதிவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறியமுடிகின்றது.
இதன்படி மீள்குடியேற விரும்புவோருக்கான வசதிகளை அரசு செய்து கொடுக்கும் என்று தெரிகின்றது.
1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் எவ்வளவு சிங்களவர்கள் எந்தெந்த இடங்களில் வாழ்ந்தார்கள் என்ற விவரங்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் திரட்டப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.
ஆளுங் கட்சியின் மேலிட உத்தரவொன்றின் பிரகாரம் இந்தச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று தெரிகின்றது.
வடக்கின் காணிகள் வெளியாரால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தான சர்ச்சைகள் நீண்டகாலம் நிலவி வரும் நிலையில், இங்கு சிங்களக் மீள்குடியேற்றங்களுக்கு அரசு தயாராகி வருவது தமிழர்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
