இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது கட்சியின் அரசியல் பொறிமுறை என்ன என்பது தொடர்பான அறிவிப்பை சஜித் பிரேமதாஸ வெளியிடவுள்ளார்.

1 year ago


இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது கட்சியின் அரசியல் பொறிமுறை என்ன என்பது தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி வெளியிடவுள்ளது என தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமது ஆட்சியின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், பொருளாதார மீட்சி திட்டங்கள், வெளிவிவகாரக் கொள்கை என்பன உள்ளிட்ட விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பட்டியிலிடப்படவுள்ளது. அத்துடன், தேசிய இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வு திட்டம் பற்றிய உறுதி மொழியும் வழங்கப்படவுள்ளது. மலையக தமிழ் மக்களுக்கான அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பான பிரச்னைகளுக்கான தீர்வுத் திட்டங்களும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்படவுள்ளது.