தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சியின் குழு ஒன்று பரப்புரை கூட்டங்களை நடத்தவுள்ளதாக அறிய வருகின்றது.

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சியின் குழு ஒன்று பரப்புரை கூட்டங்களை நடத்தவுள்ளதாக அறிய வருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் சிறப்புக் குழு இன்று வவுனியாவில் கூடி ஆராயவுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து எதிர்வரும் 14ஆம் திகதி கட்சியின் மத்திய குழு கூடி இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
இதனிடையே, கடந்த முதலாம் திகதி கூடிய தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், தமிழ்ப் பொது வேட்பாளரை விலகுமாறும் வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில், தமிழ்ப் பொது வேட்பா ளரை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியினர் பரப்புரை கூட்டங்களை நடத்தத் தயாராகி வருகின்றனர். என்று அறிய வருகின்றது.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியினரால் நடத்தப்படும் இந்தப் பரப்புரை கூட் டங்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சியில் நடத்தப்பட ஏற் பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தப் பரப்புரைக் கூட்டங்களில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் பகிரங்கமாக மேடையேறி பிரசாரத்தில் ஈடுபடுவர் என்று கூறப்படுகின்றது. எனினும், இந்தக் கூட்டங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என்று அறிய வருகின்றது.
இதனிடையே, நேற்றைய தினம் மட்டக்களப்பிலும், நேற்றுமுன்தினம் வவுனியாவில் நடந்த பரப்புரை கூட்டங்களில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும் பங் கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
