பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கின் சகல தேர்தல் மாவட்டங்களிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனித்தே போட்டியிடும்

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கின் சகல தேர்தல் மாவட்டங்களிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனித்தே போட்டியிடுவது என்று அந்தக் கட்சியின் அரசியல் குழு தீர் மானித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு நேற்று முன்தினம் இரவு மெய்நிகர் வழியே கூடியது.
இந்தக் கூட்டத்தில், அம்பாறை, திருகோணமலையில் கூட்டாகப் போட்டியிட முன்வைக்கப்பட்ட ஆலோசனை தொடர்பில் கூடுகிறது.
இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் வேட்பாளர் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் வெற்றி வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுத்து கட்சியின் உயர்பீடத்துக்கு சிபாரிசுகளை அந்தக் குழு அளிக்கும்.
தமிழ் அரசுக் கட்சியின் இந்தத் தெரிவுக் குழுவில் மாவை சேனாதிராசா, ப. சத்தியலிங்கம், எம். ஏ. சுமந்திரன், சி. சிறீதரன், இரா. சாணக்கியன், த. கலையரசன், ச. குகதாசன், சீ. வீ. கே. சிவஞானம், கி. துரைராஜசிங்கம், சேயோன், ரஞ்சினி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
