ஜே.வி.பியுடன் இணையும் எம். ஏ. சுமந்திரன் ஒற்றையாட்சிக்கு இணங்கினால் வெளிவிவகார அமைச்சு பதவி.-- உதய கம்மன்பில தெரிவிப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சி பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவி வழங்கப்படும் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
சமஷ்டி ஆட்சி முறைமையிலான புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி அநுரகுமார, தமிழ்த் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார்.
எனவே, நாட்டுக்கு எதிரான இச்செயல்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா? என்றும் கம்மன்பில கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நடைபெற்ற சர்வஜன சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ் அரசுக் கட்சி அரசாங்கத்துடன் ஒன்றிணைவது அவர்களின் அரசியல் உரிமை. அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன என்பதை ஆராய வேண்டும்.
ஒற்றையாட்சி முறைமையிலான அரசமைப்பை நீக்கி, சமஷ்டி ஆட்சி முறைமையிலான புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட 30.1 தீர்மானத்தை மீள அமுல்படுத்த வேண்டும் என்ற இரண்டு பிரதான நிபந்தனைகளை தமிழ் அரசுக் கட்சி விதித்துள்ளது.
இவ்விரு நிபந்தனைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.
அத்தோடு, சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்குவதில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது.
ஆனால், அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது”- என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
