
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இளைஞர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து மற்றொரு உயிரை காப்பாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் ஹமில்டன் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
17 வயதான ஸிகா பாக்ஸ் என்ற பள்ளி மாணவர் இவ்வாறு உயிரை மீட்டுள்ளார்.
நண்பர் ஒருவரின் வீடு தீப்பற்றிக் கொண்டிருந்த நிலையில் தீ விபத்தில் சிக்கி இருந்தவரை குறித்த பள்ளி மாணவன் தைரியமாக மீட்டுள்ளார்.
குறித்த பாதையைக் கடந்து செல்லும் போது வீடு ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை அவதானித்ததாகவும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து கொண்டிருப்பதை உணர முடிந்ததாகவும் குறித்த மாணவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டுக்கு அருகாமையில் சென்றபோது ஒருவர் ஆபத்தில் சிக்கி உதவி கோருவதை அவதானித்ததாக தெரிவிக்கின்றார்.
எனவே குறித்த பள்ளி மாணவர் மிக வேகமாக எரியும் வீட்டுக்குள் ஆபத்தில் சிக்கி இருந்தவரை மீட்டு வெளியே வந்ததாக தெரிவிக்கின்றார்.
அதிக அளவு யோசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை எனவும் தைரியமான தீர்மானத்தை எடுத்து வீட்டுக்குள் புகுந்து பாதிக்கப்பட்டவரை மீட்டதாகவும் குறித்த பள்ளி மாணவர் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவத்தில் குறித்த பள்ளி மாணவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
