
இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.
போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் தனது "எக்ஸ்" தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.
இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தனது கோரிக்கைகள் தொடர்பில் போலந்து வெளிவிவகார அமைச்சரின் பதில்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
