சத்தியலிங்கம் மீதான குற்றப் பத்திரிகையின் பிரதியை சுமந்திரனிடம் சிவமோகன் வழங்க முற்பட்ட போது மறுத்துவிட்டார்.
8 months ago

தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது தான் சுமத்திய குற்றப் பத்திரிகையின் பிரதியை சுமந்திரனிடம் சிவமோகன் நேற்று வழங்க முற்பட்ட போது அந்தப் பிரதியை வாங்க சுமந்திரன் மறுத்துவிட்டார்.
தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது.
இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயல்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சிவமோகன் குற்றபத்திரிகையை தயார் செய்து அதன் பிரதியை சகல மத்திய குழு உறுப்பினர்களுக்கும் வழங்கினார்.
அவரின் பிரதியை சுமந்திரன் வாங்க மறுத்துவிட்டார் - என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
