தென்கொரியா வானில் 5 சீன,6 ரஷிய இராணுவ விமானங்கள், நுழைந்ததால் தென்கொரியா இராணுவம் அறிவிப்பு
7 months ago


தென்கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக தென்கொரியா இராணுவம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது.
இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.
முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது.
சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவுவது அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
