யாழ்ப்பாணத்தில் யோகாசனப் பயிற்சி செய்து கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

1 year ago

யாழ்ப்பாணத்தில் யோகாசனப் பயிற்சி செய்து கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

கொக்குவிலைச் சேர்ந்த ரவீந்திரன் சுதாகர் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென மயங்கி வீழ்ந்தவரை மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.