முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக அகழ்வு இடம்பெறுகிறது

முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது
கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப் பணியானது கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்டத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக இதுவரை பல இடங்களை கிண்டி எதுவுமே கிடைக்கவில்லை.
இன்றும் கொழும்பில் இருந்து வந்த குழுவினர் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக அந்த இடத்தில் அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு பிழையான தகவல்களை யார் வழங்குகிறார்கள் என்பது தான் தெரியாமல் இருக்கிறது.
இந்த இடங்களை அடையாளப்படுத்த உதவுபவர்கள் இது சம்பந்தமாக எதுவுமே தெரியாதவர்கள் என்பது தெரிகிறது.
இப்படிப்பட்டவர்களின் சொல்லைக் கேட்டு வருபவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றுதான் தெரியாமல் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
