இத்தாலியப் பெண்ணை பலாத்காரமாக காரில் ஏற்ற முயன்ற தேரர் மீது அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

இத்தாலியப் பெண் ஒருவரை பலாத்காரமாக காரில் ஏற்ற முயன்ற தேரர் ஒருவர் மீது அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இத்தாலியப் பெண் நேற்று (06) அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ருவன்வெலிசாய விகாரைக்கு சென்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த தேரர் இத்தாலியப் பெண்ணிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இத்தாலியப் பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்த சென்றுள்ளார்.
பின்னர், சிறுது நேரம் கழித்து தேரர் இத்தாலியப் பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தன்னை சந்திப்பதற்கு வருமாறு கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த இத்தாலியப் பெண் தனது ஹோட்டல் நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த தேரர் இத்தாலியப் பெண்ணை காரில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதன்போது, இந்த காரின் சாரதியும் காரில் ஏறுமாறு அச்சுறுத்திய நிலையில், இத்தாலிய பெண் அருகில் இருந்த கடை ஒன்றிற்குள் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இத்தாலிய பெண் இது தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
