யாழ்.பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து இளைஞரை தாக்கியதால் இரு பொலிஸார் பணியிடை நீக்கம்.
11 months ago

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில், தடுத்து வைத்து சந்தேக நபர் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யயப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இளைஞனை தாக்கிய குற்றச்சாட்டில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் தலா 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
