ட்ரம்ப் உட்பட பலரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர்.

1 year ago


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பலரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர்.

அமெரிக்க அரசியல்வாதிகளை கொலை செய்ய திட்டமிட்டார் என ஈரானுடன் தொடர்புகளை பேணிய பாகிஸ்தானைச் சேர்ந்த நபருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள னர்.

அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளை கொலை செய்வதற்காக நபர் ஒருவரை அமர்த்துவதற்கு 46 வயது அசிவ் மேர்ச்சன்ட் முயன்றார் என அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள் ளனர்.

பொது அதிகாரி, அல்லது அமெரிக்க பிரஜையை கொல்வதற்கான வெளிநாட்டு சதி எங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என எவ். பி. ஐ. யின் இயக்குநர் தெரிவித்தார்.