விற்பனை செய்யும் போர்வையில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஒன்றாறியோவில் 200க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு

வீடு வீடாகச் சென்று விற்பனை செய்யும் போர்வையில் மக்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாறியோ மாகாணத்தில் இவ்வாறான 200க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வீடு வீடாகச் சென்று பொருட்கள் சேவைகளை விற்பனை செய்யும் போர்வையில் மக்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீடுகளுக்குச் சென்று வீடுகளை புனரமைப்பதாக கூறி இவ்வாறு பணம் மோசடி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் உதவிகளின் அடிப்படையில் வீடுகள் புனரமைக்கப்படும் எனக் கூறி இந்த மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமலே வீட்டைப் பயன்படுத்தி வீட்டு ஆவணங்களை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெறுவதாகவும் இவ்வாறு மோசடிகளில் சிக்கும் சிலர் தங்களது வீடுகளை இழக்க நேரிடுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
