கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவை படுகொலைக்கு பெண் ஒருவரும் உடந்தை


கொழும்பு புதுக்கடை நீதிமன்ற எதிர்க்கூண்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்கு சட்டத்தரணி போல் வேடமணிந்த பெண்ணொருவரும் உடந்தையாக செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சட்டத்தரணிகள் போல் வேடமணிந்து வந்த இருவர் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை புத்தகத்தினுள் கைத் துப்பாக்கியை மறைத்து வைத்தே நீதிமன்றினுள் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட 5 விசேட குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரையும் அவருக்கு உதவிய நபரையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் தற்போது பெண்ணொருவர் உள்ளிட்ட இருவரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டு அவர்கள் தொடர்பிலான தகவல்களை தருமாறு பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
