தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ரணிலை ஆதரிக்காது- எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு.

தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ரணிலை ஆதரிக்காது. நாம் மூவர் ஜனாதிபதியை சந்தித்தோம் என்று எம்மீது சேறு பூச முனைகிறார்கள் என்று செல்வம் அடைக்கலநாதன் எம். பி. தெரிவித்துள்ளார். அத்துடன், ஜே. வி. பியினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து வடக்கு -கிழக்கை பிரித்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
நேற்று தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், தமிழ்ப் பொது வேட்பாள ருக்குரிய ஆதரவுதளம் அதிகரித்து வருகின்றது. எமது மக்கள் எமது இலட்சியப் பாதையில் பொது வேட்பாளருக்கு கட்டாயம் வாக்களிப்பார்கள்.
எமது கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர் வினோநோகராதலிங்கம் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக எதிராகக் கூறும் கருத்துகள் அவருடைய தனிப்பட்டவை. எங்களுடைய கட்சி ஒரு ஜனநாயக ரீதியான கட்சி. தமிழ் மக்களும் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளும் ஓர் அணியில் திரள வேண்டும். பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் எமது தமிழ் சமூகம் ஒரு குடையின் கீழ் அணி திரண்டு இருக்கின்றது. இதனை செய்தியாக்க வேண்டும் என்பதுதான் நமது "சங்கு" சின்னத்தின் நோக்கமாக இருக்கின்றது.
தமிழீழ விடுதலை இயக்கத்தினர் மக்களுடைய சிந்தனை அடிப்படையில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள். எந்த நிலையி லும் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு விரல் நீட்டுகின்ற நிலை ஏற்படாது - என் றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
