புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் கைவிடப்படுகிறது
8 months ago

நாடளாவிய ரீதியாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (30) நள்ளிரவுடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் சஞ்சய ஜயசுந்தர தெரிவித்தார்.
இன்று (30) மாலை 4.30 மணிமுதல் பயணச்சீட்டு விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
பல கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே நிலைய அதிபர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
