இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16,930 பேர் பாதிப்பு

1 year ago



இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, மேற்படி மாகாணத்தில் 14,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் 1,496 பேரும், வடமத்திய மாகாணத்தில் 356 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மைய பதிவுகள்