அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரிய கையெழுத்து போராட்டம் திருகோணமலையில் இன்று இடம்பெற்றது


பலவருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரிய கையெழுத்து போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் இன்று (13) இடம்பெற்றது
குறித்த கையெழுத்து வேட்டையானது போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டனர்.
குறித்த கையெழுத்துப் போராட்டமானது வடக்குக் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன்,
அரசியல் கைதிகள் பல வருட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் விசாரணைகள் ஊடாக பலரும் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைப் புதிய அரசு விடுதலை செய்ய வேண்டும். தமிழ் மக்களின் குரலைக் கேட்டு அரசு செவிசாய்த்து உடனடியாக விடுதலை செய்யக் கோரியே இந்தக் கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்றார்.
ஐந்து ஆண்டுகள் தொடக்கம் முப்பது ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை இந்த அரசு சுதந்திரதினத்தன்றாவது விடுதலை செய்ய வேண்டும்.
ஜனாதிபதி யாழ். மண்ணில் வைத்து தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததைப் போன்று பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரிடத்தில் கேட்டு கொள்கின்றோம்.
இந்தக் கோரிக்கையை சட்டமா அதிபர், நீதியமைச்சர், ஜனாதிபதி ஆகியோரிடம் கையளிக்கவுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
