2024 இல் பெய்த மழையால் ஏற்பட்ட பயிரழிவுக்கு நட்டஈடு வழங்க வேண்டும்.யாழ்.சங்கானைப் பிரதேச விவசாயிகள் கோரிக்கை

1 year ago



கடந்த 2024 பெய்த பருவ மழை வீழ்ச்சியின் நிமித்தம் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிரழிவு தொடர்பில் அரசாங்கம் அறிவித்த காப்புறுதித் தொகை அல்லது நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறில்லையெனில் பிரதேச, மாவட்ட விவசாயக் கூட்டங்கள் நடத்துவதில் பயனில்லை என்று யாழ்.சங்கானைப் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற பிரதேச விவசாயக் குழுக்கூட்டத்திலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.

விவசாயிகளாகிய நாம் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளை ஒவ்வொரு வருடமும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தென்னிலங்கையில் விவசாயிகளுக்கு குறுகிய அழிவுகள் ஏற்படுகின்றபோதே காப்புறுதி வழங்கப்படுகின்ற போதும் எம்மை மத்திய அரசாங்கம் புறக்கணிக்கின்றது.

எனவே விவசாயிகளான எமக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும். இல்லையேல் இத்தகைய கூட்டங்களை நடத்தாதீர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அண்மைய பதிவுகள்