இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனரை ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு

1 year ago

மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பலஸ்தீனரை இஸ்ரேலிய இராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

மேற்கு கரை ஜெனின் நகரத்தில் கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலிய இராணுவம் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பலஸ்தீனர் ஒருவர் காயமடைந்தார். அவருக்கு முதலுதவி செய்யாமல் இஸ்ரேலிய இராணுவம் ஜீப்பின் முன்பக்கம் கட்டி இழுத்துச் சென்றது.

இதுதொடர்பான வீடியோ வைரலானதையடுத்து இஸ்ரேல் இராணுவத்தின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அண்மைய பதிவுகள்