இலங்கையில் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்களின் ஏற்றுமதி வருமானம் நவம்பரில் 13.8 சதவீதம் அதிகரிப்பு
6 months ago

தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்களின் ஏற்றுமதி வருமானம் கடந்த நவம்பர் மாதத்தில் 13.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
இதன்படி, 70 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வருடத்தின் முதல் 11 மாத காலப்பகுதியில் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 782 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி நடவடிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், சந்தையில் தேங்காய்க்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
