
வவுனியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழையால் 20 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது இருப்பிடங்களில் இருந்தும் வெளியேறியுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வவுனியாவில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகின்றது.
இதனால் வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் இடர் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் பல வீடுகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அந்த வகையில், வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நெளுக்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் பீடியாபாம் பகுதியில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேரும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மத்திய நீர்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள பாவற்குளம், இராசேந்திரங்குளம், ஈரப் பெரியகுளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம் மற்றும் கல்மடு அணைக்கட்டு என்பன நீர்வரத்து அதிகரித்தமையால் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருகின்றன.
இதனால் இதன் கீழ்ப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
