கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக 50 மீற்றர் தூரத்திலுள்ள மைதானத்துக்குச் செல்லும் பாதை இராணுவம் ஆக்கிரமிப்பில்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக 50 மீற்றர் தூரத்திலுள்ள மைதானத்துக்குச் செல்லும் பாதை இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது.
இதனால் மாணவர்கள் ஒரு கிலோமீற்றர் வரை நடந்தே சென்று மைதானத்தை அடைகின்றனர் என்று பாடசாலைச் சமூகம் விசனம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் பாடசாலையின் நிகழ்வுகளுக்கு மைதானத்துக்குச் செல்லவேண்டுமாயின் பாடசாலையின் வீதிக்கு வருகை தந்து அங்கிருந்து ஏ -9 பிரதான வீதி வழியாக மத்திய விளையாட்டு மைதானத்தை ஊடறுத்து கிளிநொச்சி மகாவித்தியாலய மைதானத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் மாணவர்கள் மைதானத்துக்குச் சென்று வருவதிலேயே களைப்புற்று சோர்வடைகின்றனர்.
மைதானத்துக்குச் செல்லும் பாதையை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனரென்பதால் மாணவர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நீண்டகாலமாக பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தபோதிலும் இதுவரை குறித்த பாதையை இராணுவம் விடுவிக்கவில்லை.
எனவே புதிய அரசு இந்த விடயத்தைக் கவனத்தில் எடுத்து மாணவர்களின் நன்மை கருதி குறித்த பாதையை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாடசாலைச் சமூகம் கோரியுள்ளது.
(F-214)
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
