வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுக, மக்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை
9 months ago

வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுமாறு, மக்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் படைகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்களின் வீடுகளை இராணுவ தளங்களாக பயன்படுத்தி வருவதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில காலமாக இஸ்ரேல் - லெபனான் எல்லை மோதல்கள் இருந்து வந்தாலும், கடந்த 23ஆம் திகதி முதல், ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
லெபனானில் நடந்த மோதலில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
ஹிஸ்புல்லா போராளிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படும் பேஜர்கள் உட்பட தகவல் தொடர்பு சாதனங்களை இஸ்ரேலின் அதிநவீன ரிமோட் வெடிப்பே இந்த மோதல்களுக்கு ஒரு முக்கிய காரணம் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
