சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்க தீர்மானம்.-- வியாழேந்திரன் தெரிவிப்பு

1 year ago



சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுத் தேர்தலில்        போட்டியிடுவதற்காக வியாழேந்திரன் இம்முறை தாக்கல் செய்த வேட்புமனு       நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்