ராஜபக்ஷ பொது நிதியை கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ஷ சவால்

ராஜபக்ஷ ஆட்சியின்போது பொது நிதியை கொள்ளையடித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
உகண்டா மற்றும் சீஷெல்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் பொது நிதிகள் கொள்ளையிடப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி முன்னர் தெரிவித்த கூற்றுக்களின் காணொலி காட்சிகளை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அதனை நிரூபிக்குமாறு சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவேண்டிய நேரம் இதுவென்றும் நாமல் ராஜபக்சஷ பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்- “உகண்டா மற்றும் பல்வேறு நாடுகளில் பில்லியன் கணக்கான டொலர்களை நாங்கள் பதுக்கி வைத்துள்ளோம் என்று ஜனாதிபதியும் அவரது குழுவும் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இது- என பதிவிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
