லசந்த படுகொலை மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கோரிய பரிந்துரையை இரத்து செய்வதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதிமன்றத்துக்கு கடிதம்
5 months ago

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்த பரிந்துரையை தற்காலிகமாக இரத்து செய்வதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்கு கடிதம் மூலம் இன்று வியாழக்கிழமை (13) அறிவித்துள்ளார்.
லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டமை மற்றும் அவரது குறிப்பேடு காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில், குறித்த பரிந்துரையை தற்காலிகமாக இரத்து செய்வதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
