ரஷ்யா - உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த இரு பெண்கள் அமைதி வேண்டி தமிழக கோவில்களில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இரு நாடுகளிடையே போர் நிறுத்தம், அமைதி வேண்டி ரஷ்யா - உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தமிழகத்திலுள்ள இந்துக் கோவில்களில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகேயுள்ள 69 சாத்தனூர் கிராமத்தில் உள்ள திருமூலர் கோவிலில் ரஷ்யா - உக்ரைன் தோழிகள் வழிபாடு நடத்தினர்.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஷெனியா(வயது -27), உக்ரைனைச் சேர்ந்தவர் இலியானா(வயது 29). இவர்கள் இருவரும், இரு நாடுகளிடையே போர் தொடங்குவதற்கு முன்பிருந்தே தோழிகளாக உள்ளனர்.
அண்மையில் இந்தியா வந்த இருவரும். இரு நாடுகளிடையே போர் நிறுத்தம், அமைதி வேண்டி தமிழக கோவில்களில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக கும்பகோணம் பகுதியில் உள்ள திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கஞ்சனூர் சுக்கிரன், திருமணஞ்சேரி ஆகிய கோவில்களில் வழிபாடு நடத்தினர்.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் ஷெனியா, இலியானா கூறியவை வருமாறு, ”ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் முடிவுக்கு வரவேண்டும் என கோவில்களில் வழிபாடு செய்து வருகிறோம்.
எங்களது நம்பிக்கை வீண் போகாது. இரு நாடுகளிலும் அமைதி ஏற்படும் என நம்புகிறோம். அடுத்து, மதுரை மீனாட்சி அம்மன், பழநி, திருவண்ணாமலை ஆகிய கோவில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தவுள்ளோம்"- என்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
