வடமாகாண மாற்றுத் திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA) மீள இயக்குமாறு ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை
7 months ago

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத் திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA) மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை கண்சத்திர சிகிச்சை நிபுணர் மலரவன், வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கையை நடைமுறைப் படுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குவியமையம்மை உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
இவற்றைச் சாதகமாக ஆராய்வதாக ஆளுநர் அவர்களிடம் உறுதியளித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
