லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒரு முழு வீச்சுப் போருக்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் கடந்த திங்கட்கிழமை முதல் லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.
குறிப்பாக, லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததை அடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
3ஆவது நாளாக நேற்று முன்தினம் புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டனர். 233 பேர் காயமடைந்தனர்.
இதனால் லெபனானில் மொத்த உயிரிழப்பு 620 ஆக அதிகரித்தது. இதுவரை 5 இலட்சம் பேர் வரை தெற்கு லெபனானில் இருந்து மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் இராணுவத் தளபதி ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி, படையினர் மத்தியில் ஆற்றிய உரையில்,
"உங்கள் தலைகளுக்கு மேல் ஜெட் விமானங்கள் பறப்பதை உணர்ந்திருப்பீர்கள். நாம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறோம். இனி தரை வழித் தாக்குதலுக்கும் நாம் ஆயத்தமாக வேண்டும். ஹிஸ்புல்லாக்களை தொடர்ந்து பலவீனப்படுத்துவோம்" என்று கூறி னார்.
இதேவேளை, "ஒரு முழு வீச்சுப் போருக்கு வாய்ப்புள்ளது. இந்த மோதலைத் தடுக்க ஏதுவான சூழலும் இல்லாமல் இல்லை.
ஒருவேளை அது நடந்தால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படும்.
ஒரு தீர்வுக்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது" என்று அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
