
ஐனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் யாழ். மாவட்டத்தில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் 257 திட்டங்களுக்கு ஜனாதிபதி செயலகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு 11 பிரதேச செயலர் பிரிவுகளில் 146 திட்டங்களுக்கு 47 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 14 வேலைத் திட்டங்கள் இதுவரை முடிவுறுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு 13 பிரதேச செயலர் பிரிவுகளில் 21.45 மில்லியன் ரூபாவில் 97 திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 9 வேலைத் திட்டங்கள் நிறைவுறுத்தப்பட்டுள்ளன.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு 14 திட்டங்களுக்கு 25 மில்லியன் ரூபா நிதி 4 பிரதேச செயலர் பிரிவு களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலைத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்படும் என யாழ். மாவட்ட பதில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
