2025 ஆரம்பத்தில் உள்ளூராட்சித் சபைத் தேர்தல்.-- அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவிப்பு

1 year ago



2025 ஆரம்பத்தில் உள்ளூராட்சித் சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடத்தப்படும்.

அதற்கு நிதி ஒதுக்கவேண் டியுள்ளது. எனினும், மக்களின் வாக்குரிமையை பாது காக்க நடவடிக்கை எடுப்போம்.” - எனவும் அமைச்சர் கூறினார்.


அண்மைய பதிவுகள்