இஸ்ரேல் ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பலஸ்தீனத்தில் பலி எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியது.

6 months ago



இஸ்ரேல் ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பலஸ்தீனத்தில் பலி எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியது.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200 பேரைக் கொன்றனர்.

மேலும், 250 பேரை பணயக் கைதிகளாக கடத்திச் சென்றனர்.

அவர்களில், 100 பேர் இன்னும் காஸாவுக்குள் இருப்பதாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த இஸ்ரேல், காஸா மீது போர் தொடுத்தது.

கடந்த 15 மாதங்களாக நடந்து வரும் இந்தப் போரில், ஹமாஸ் அமைப்பினர் உட்பட இதுவரை 46 ஆயிரம் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஆயிரக் கணக்கானோரின் சடலங்கள் இடிபாடுகளிலும், மண்ணுக்கு அடியிலும் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.