இசுருபாய கல்வி அமைச்சின் கட்டடத்தில் பொருத்திய 51 லட்சம் ரூபா பெறுமதியான செப்பு நாடாக்கள் மாயம். 8 ஊழியர்களிடம் வாக்கு மூலம்.

இசுருபாய கல்வி அமைச்சின் கட்டடத்தில் பொருத்திய 51 லட்சம் ரூபா பெறுமதியான செப்பு நாடாக்கள் மாயம். 8 ஊழியர்களிடம் வாக்கு மூலம்.
பத்தரமுல்ல பெலவத்தை இசுருபாய கல்வி அமைச்சின் கட்டட வளாகத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த 51 லட்சம் ரூபா பெறுமதியான செப்பு நாடாக்கள் திருடப்பட்டமை தொடர்பில் 8 ஊழியர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பல சாதாரண பணியாளர்களும் பல்வேறு அலுவலக அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டட வளாகம் முழுவதும் பொருத்தப்பட்டிருந்த 1731 அடி மின்னல் கடத்தி செப்பு நாடாக்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சின் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
வெளியாள்கள் யாரும் கட்டடத்தின் உச்சிக்கு செல்ல முடியாது எனவும் அங்கு பணிபுரிபவர்கள் மட்டுமே அந்த இடத்துக்குச் செல்ல முடியும் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
